ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூன்று விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வென்று சாதனை படைத்துள்ளார்.

VIRATKOHLI

கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்த வரிசையில் 2018ம் ஆண்டிற்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மூன்று முக்கிய விருதுகளை வென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஐசிசியின் சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கோலி, இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

icc

இதன் மூலம் ஐசிசியின் மூன்று விருதுகளை ஒரே ஆண்டில் பெற்ற முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை விராட் படைத்துள்ளார். கடந்த ஆண்டு தனது பேட்டிங் மூலம் எதிரணியினரை மிரட்டிய கோலி 13 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1322 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் உட்பட 1202 ரன்களும், 10 டி20 போட்டிகளில் 211 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்.

விராட் கோலியை தவிர்த்து ரிஷப் பண்ட், ரோஷித் சர்மா, பும்ரா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோரும் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுகளை வென்றுள்ளனர்.