சச்சின் சாதனையை முறியடித்த ‘ விராட் ‘- 205 போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்து சாதனை

2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 10000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். குறைந்த இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக விராட் உள்ளார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

virat

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் கலீல் அஹமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். போட்டியின் முதலில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். 4-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் வெளியேறினார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 8 ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது ஓவரில் நர்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட தவான் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். தவான் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 25-வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார். இதனை தொடர்ந்து அம்பதி ராயுடு 73 ரன்கள் எடுத்த நிலையில் நர்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு கோலியுடன் தோனி இணை சேர்ந்தார். இதில் நிதானமாக விளையாடிய கோலி சச்சின் சாதனையை முறியறித்துள்ளார். 205 போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்து கோலி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கள் 259 போட்டிகளில் 10000 ரன்கல் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இதையடுத்து விளையாடிய தோனி ஆட்டமிழக்க கோலியுடன் ரிஷப் பண்ட் இணைந்துள்ளார். தற்போது 40 ஓவர்கள் வரை இந்திய அணி 4விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்துள்ளது. கோலி 90 ரன்களிலும், பண்ட் 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

You may have missed