டெஸ்ட் தொடரில் தோனி சாதனையை முறியடித்த ” விராட் “

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, முன்னாள் கேப்டனான தோனி மற்றும் அசாருதின் உள்ளிட்ட வீரர்களின் சாதனையை முறியத்துள்ளார். 2வது நாள் ஆட்ட முடிவின் 2வது இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இந்தியா உள்ளது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி 2-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கியது.

virat

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தவான் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அரை சதம் கடப்பதற்கு முன்பாகவே ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரஹானே சிறப்பாக செயல்பட்டு அணிக்கு பலம் சேர்ந்தனர். முதல் இன்னிங்கில் விரார் 97 ரன்களிலும், ரஹானே 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு விளையாடிய பந்து வீச்சாளர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியினருக்கு இம்முறை வாய்ப்பு சாதகமாக அமையவில்லை. ஹர்த்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர்களை கலக்கம் அடைய செய்தார். விக்கெட் கீப்பரான ரிஷ்ப் பண்ட் தன் பங்கிற்கு கேட்ச்களை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்தியா 168 ரன்களுக்கு முன்னிலை வகித்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. இதனால் இந்தியா 292 ரன்கள் என்ற நிலையில் வலுவான நிலையை எட்டியடு. 3வது நாள் ஆட்டத்தின் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 103 ரன்களை கடந்து சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களான தோனி, அசாருதின் உள்ளிட்ட கேப்டன்களின் சாதனைகளை கோலி தகர்த்தெரிந்தார். இங்கிலாந்து மண்ணில் 2 இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த கேப்டன்களின் வரிசையில் விராட் கோலி இடம்பிடித்தார்.

டெஸ்ட் அரங்கில் அதிகமாக 50க்கும் மேல் ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்களில் தோனியை பின்னுக்கு தள்ளி விராட் சாதனை படைத்துள்ளார். கோலி இம்மைல்கல்லை 5 முறை செய்துள்ளார். மேலும், ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 9வது முறையாக 50 ரன்களுக்கு மேல் ரன் எடுத்த சச்சின், கவாஸ்கர், லட்சுமண் சாதனையை கோலி சமன் செய்தார்.