விராட் ஓவியம் விலை 2.9 மில்லியன் பவுண்ட்

லண்டன்

விராட் கோஹ்லியின் ஐபிஎல் சுற்றுப்பயணம் ஒரு ஓவியமாக புகழ்பெற்ற ஓவியர் சஷா ஜாஃப்ரியால ஓவியமாக தீட்டப்பட்டது.  அதனை ஏலத்தில் விட்டதில் 2.9. மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டது.

உலகின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் சஷா ஜாஃப்ரி.

இவர் விராட் கோஹ்லியின் ஐ பி எல் சுற்றுப்பயணத்தை ஒரு ஓவியமாக தீட்டி அதை கோஹ்லிக்கு பரிசளித்தார்.

சமீபத்தில் லண்டனில் விராட் கோஹ்லி ஃபவுண்டேஷன் நடத்திய சாரிடி விருந்தில் இந்த ஓவியம் ஏலம் விடப்பட்டது.

அதை இந்திய வம்சாவழியினரான பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் பூனம் குப்தா 2.9 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

இந்தப் பணம் கோஹ்லி ஃபவுண்டேஷனின் நிதியில் சேர்க்கப்பட்டது

இந்த ஓவியத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியுட்டுள்ள விராட் கோஹ்லி தனது மனமார்ந்த நன்றியை ஓவியருக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.