டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் கோலி-அனுஷ்கா எடுத்த புகைப்படம்!

ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை அனுஷ்கா சர்மாவுடன் கண்டு களித்த கோலி ரோஜர் பெடரருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Virat

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் ஆணி அனைத்து போட்டிகளிலும் விளையாடி முடித்து விட்டது. இதனை தொடர்ந்து விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வருகிறார்.

federerkohlianushkaausopen

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஓபன் டென்னிஸ் தொடரை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து விராட் கோலி கண்டு களித்தார். அப்போது நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருடன் கோலி-அனுஷ்கா எடுத்துக் கொண்ட புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.