தொடர்ந்து 3வது ஆண்டாக சாதனை படைத்த விராட் கோலி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-வது ஆண்டாக சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். 2018ம் ஆண்டு மட்டும் 2653 ரன்கள் குவித்து கோலி சாதனை.
சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி 3 வது ஆண்டாக தொடர்ந்து அதிக ரன்களை குவித்து சாதனை படைத்து வருகிறார். அதன்படி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் உள்ளிட்ட போட்டிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் விராட் கோலி 2653ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் அவரது சராசரி மதிப்பு 69.81ஆக உள்ளது. இதேபோன்று, 2017ம் ஆண்டு 2818 ரன்களும், 2016ம் ஆண்டு 2595 ரன்களும் எடுத்து விராட் கோலி அசத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த வருடமும் விராட் ரன் வேட்டையை தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்றே கூறலாம்.