ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: கேப்டனாக ரோகித் சர்மா பெயர் அறிவிப்பு

டில்லி:

ந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்கும் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, புதிய கேப்டனாக  ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 15ந்தேதி முதல் 28ந்தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

இநத நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற  எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆசிய போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது.

அதன்படி,  ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஒய் சகால், அக்‌ஷய் படேல், புவனேஷ் குகார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு முதுகு வலி காரணமாக  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா பெயரும் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் ராஜஸ்தானை சேர்ந்த இடதுகை வீரரான கலீல்அகமது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.