38 வது சதம் அடித்து புதிய சாதனை படைத்த கோலி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்து புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த 2வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

kohlierwer

3வது ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் 283 ரன்களை குவித்தது.

அதன்பிறகு 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 8 ரன்களிலும், தவான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமற்றம் அளித்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் 62வது சதத்தையும், ஒருநாள் தொடரில் 38வது சதத்தையும் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார்.

கடைசியாக 4 போட்டிகளில் விராட் கோலி அடித்த ரன் விபரம் :
113 (106) v நியூசிலாந்து, கான்பூர்
140 (107) v வெ.இ, குஹத்தி
157 (129) * v வெ.இ, விசாகபட்டினம்
100 (110)* v வெ.இ, புனே

ஒரு நாட்டில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 4வது இடத்தையும், தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் 3க்கு மேற்பட்ட சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 3 சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் டிவில்லியர்ஸ், கிப்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-