பெங்களூரு: ஐபிஎல் தோல்விகளில் இருந்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், “கோலி தனது முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்றும் கிண்டல் செய்திருக்கிறார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. . இதில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் 43வது லீக் போட்டியில், பஞ்சாப், பெங்களூரு அணிகள் களம் கண்டன.

இதில் ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய பெங்களூரு அணி, மிக மோசமாக விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கோலி உட்பட டிவிலியர்ஸ், கெயில் என வீரர்கள் சொதப்பினர். இதையடுத்து அந்த அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், “ கோலிதான் இது போன்ற கேவலமான ஷாட்களை விளையாடுகிறோமோ என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் முதலில் சென்று தனது முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க வேண்டும். தான்தான் இப்படி விளையாடுகிறோமா என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும கவாஸ்கர், “கோலி, தான் ஒரு கேப்டன் என்பதை உணர வேண்டும். தவிர, பார்ம் இல்லாத போது களத்தில் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடி, இழந்த பார்மை மீட்க முயற்சிக்க வேண்டும் பிறகு அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.