இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது

virtராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர், முதல் இன்னிங்ஸ்-யை ஆடிய இந்திய அணி 162 ஓவர்களில் 488 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 75.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 49 ஓவர்களில் 310 ரன்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 52.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கோலி 98 பந்துகளில் 49, ஜடேஜா 33 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியை தோல்வியின் விழும்பில் இருந்து மீட்டு டிரா செய்தார் கோலி.

2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.