நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நீக்கப்பட்டுள்ளதாக அணி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

virat

ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5ஒருநாள் போட்டிகள் மற்றும் 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளிலும், அதன் பிறகு நடைபெறும் டி20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என இந்திய அணி தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதனால் கோலி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடர் நெருங்குவதால் தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பதற்காக அவர் நியூசிலாந்து உடனான போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோலிக்கு பதிலாக 4 மற்றும் 5வது ஒருநாள் மற்றும் டி10 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.