ரசிகர்களுக்கு விராட் கோலி புத்தாண்டு வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3டி20, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி இந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

virat

இதையடுத்து நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வரலாற்று வெற்றீயை பதிவு செய்தனர். இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் பிறக்க இருக்கும் 2019ம் வருடத்தின் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி சிட்னியில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். அதுமட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோலி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து என் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு சிறப்பாக அமைய அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

You may have missed