2018ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட ட்வீட் இது தான்!

2018ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டிவீட்டாக விராட் கோலியின் டிவீட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவிற்கு செய்த டிவீட் அதிகளவில் ட்ரெண்டாகி உள்ளது.

virat

2018ம் ஆண்டு நிறைவடைந்து 2019ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் கடந்த ஓராண்டாக இந்தியாவில் அதிகமாக ட்ரெண்டான ஹேஷ்டேகுகள், ட்வீட்கள் மற்றும் ரிட்வீட்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் நடிகர் விஜய் நடித்த சர்கார் ஹேஷ்டேக் இந்திய அளவில் அதிகளவில் ட்ரெண்டாகியது தெரிய வந்துள்ளடு. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் விஜய் 8ம் இடத்தை பிடித்துள்ளார்.

அதுபோலவே, விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு செய்த ட்விட்டர் பதிவு அதிகளவில் பேசப்பட்டது. கர்வாசௌத் பண்டிகையின் போது விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, ” என்னுடைய மனைவி என் உலகம் ” என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டர் சுமார் 2.1 லட்சம் லைக்குகளையும், 14 ஆயிரம் ரிட்வீட்களையும் பெற்றது.

அந்த வகையில் 2018ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டிவீட்டாக விராட் கோலியின் டிவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது.