மொகாலி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார்.

இவர் மொகாலியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இவர் எடுத்த 104 ரன்கள் மூலம் பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. 63 பந்துகளில் 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். ஐபிஎல் 2018 போட்டியில் இது இவரது முதல் சதமாகும்.

38 வயதாகும் கிறிஸ் கெயில் இது குறித்து கூறுகையில், ‘‘பெரும்பாலானோர் எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கின்றனர். இந்த போட்டிக்கு பின்னர் நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போது உறுதியாக இருப்பேன். உலகில் எங்கு சென்றாலும், யாருக்காக விளையாடினாலும் இதை கடைபிடிப்பேன்.

நான் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்தபோது நிறைய விஷயங்களை நான் நிரூபிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். என்னை ஏலம் எடுத்ததன் மூலம் வீரேந்திர சேவாக் ஐபிஎல்.லை காப்பாற்றி விட்டார். பஞ்சாப் அணியின் ஆலோசகராக வீரேந்தி சேவாக் உள்ளார். நான் இரண்டு போட்டியில் வெற்றி தேடி தந்தாலே நமது பண மதிப்பு கிடைத்துவிடும் என்று சேவாக் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இது குறித்து நான் அவரிடம் உரையாட வேண்டும்’’ என்றார்.

பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில் தாமதமாக ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொகாலி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். இவர் மொகாலியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இவர் எடுத்த 104 ரன்கள் மூலம் பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. 63 பந்துகளில் 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். ஐபிஎல் 2018 போட்டியில் இது இவரது முதல் சதமாகும்.