அன்னையர் தினத்தில் தனது தாயைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்த வீரேந்திர சேவாக்

மும்பை

பிரபலகிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயைப் பற்றிய செய்திகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி இணையத்தில் பல பிரபலங்கள்  தங்கள் தாயைப் பற்றிய செய்திகளை மகிழ்வுடனும் பெருமையுடனும் பகிர்கின்றனர்   இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது அன்னையை குறித்து செய்திகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார்

சேவாக், ” என்னுடைய அம்மா என்னை எனது ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கப்படுத்தி என்னைப் படி படி என்று வலியுறுத்தினார்,  அதே வேளையில் எனது கிரிக்கெட்டும் அவருக்கு மகிழ்ச்சியளித்ததது.  அவர் எனக்கு முன்பாக எழுந்திருந்து எனக்கு பரோத்தாக்கள் செய்து கொடுப்பார்.  நான் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

என் சகா ஒருவர் எந்த உணவும் கொண்டு வர மாட்டார், களத்தில் பசியினால் மயங்கி விழுந்து விடுவார், என்னுடைய  அம்மா அவருக்கும் எனக்கும் சேர்த்து 8 பரோட்டாக்கள் செய்து கொடுப்பார்.  அந்த அளவுக்கு என் அம்மாவுக்கு அனைவர் மீதும் பாசம் அதிகம்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.