லண்டனிலிருந்து மீண்டும் துவங்கும் விமான சேவை – ‍டெல்லி & மும்பைக்கு..!

லண்டன்: பிரிட்டிஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக், செப்டம்பர் 2 முதல், டெல்லி & மும்பை நகரங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஏர் பப்பிள் ஒப்பந்தப்படி, வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து, இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கு விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து வாரத்திற்கு 3 விமானங்கள் டெல்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கப்படும். மேலும், செப்டம்பர் 17ம் தேதி முதல் மும்பை – லண்டன் வழித்தடத்தில் வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும்.

மேலும், இந்த விமானப் போக்குவரத்து சேவையில், அமெரிக்காவின் நியூயார்க்கும் இணைக்கப்படும். இந்தியா – பிரிட்டன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, இந்த விமான சேவைகள் துவங்கப்படவுள்ளன.