விருதுநகர்:  டி.வி. வெடித்து  சிறுவன் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியை அடுத்த சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் தயாநிதி 6-ம் வகுப்பு படித்து வந்தார்

நேற்று இரவு தயாநிதி வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொலைக்காட்சிப் பெட்டி வெடித்துச் சிதறியது. இதில்  சிறுவழ் தயாநிதியின் உடலில்  கடுமயைன தீக்காயம் ஏற்பட்டது.

சிறுவன் தயாநிதி வலியால் அலறினார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.  ஆனாலும் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விருதுநகர் பகதுயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English Summary
virudhunagar tv blast boy dies-