விசாகப்பட்டின விஷவாயு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு… கால்நடைகளும் பலி…

விசாகப்பட்டினம்:

விசாகப்பட்டின விஷவாயு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விஷவாயு தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை விஷவாயு கசிந்து வெளியானதில், அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர்  மயங்கி விழுந்தனர். சுமார் 3ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் விஷவாயு கசிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாகப்பட்டினம் அருகே உள்ள வேங்கடபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ்  ரசாயண தொழிற்சாலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில்  பாலி வினைல் குளோரின்  வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு அந்த பகுதி முழுவதும் சூழ்ந்திருந்தது.

இதுகுறித்துஅறியால பலர் தூங்கி எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், குளோரின் வாயுவினால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மீட்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. மாநில தீயணைப்புத்துறை, பேரிடர் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விஷவாயு விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட தலைவர்கள்   இரங்கல் தெரிவித்துள்ளனர்.