விசாகப்பட்டினம் விஷவாயுவுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி.. ஜெகன்மோகன் ரெட்டி

--

விசாகப்பட்டினம்:

விசாகப்பட்டிம் அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியான விஷவாயுவில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்  அருகே உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாலி வினைல் குளோரின் வாயு கசிந்தது. இதை சுவாசித்த அருகில் உள்ள கிராமத்தைச்சேர்ந்த ஏராளமானோர் திடீர் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் 13 பேர் பலியான நிலையில், ஏராளமான வளர்ப்பு விலங்குகளும் பலியானதாக கூறப்படுகிறது. சுமார்  3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிங் ஜார்ஜ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுளோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன், ‘விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்ப்படும். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு தேவையான உதவியைச் செய்யும்’ என்றும், ஆலைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு ரூ 10 ஆயிரம்  முதல் 15 ஆயிரம் வரை உதவி  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.