விஷால் – ஆர்யா கூட்டணியை இயக்கும் ஆனந்த் ஷங்கர்….!

‘நோட்டா’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஆனந்த் ஷங்கர்.

இந்த புதிய படைப்பில் விஷால் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்யவுள்ளார் .

இதில் ஆர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நாயகியாக ரீத்து வர்மா, இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பரிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்ல, படக்குழு திட்டமிட்டுள்ளது.