நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி….!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷாலுக்கு கொரோனா என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15, 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை GK ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் . தந்தையுடன் இருந்து விஷாலுக்கும் தொற்று பரவியுள்ளது. அவரது டெஸ்ட் ரிப்போர்ட்டும் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

இருவருக்கும் நெகட்டிவ் என தற்போது டெஸ்ட் ரிப்போர்ட் வந்துள்ளதாம்.. ஆயுர்வேத மருந்து சாப்பிடதால், இருவரின் உடல்நிலை சீராக இருக்கிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது .