sk
கடந்த செவ்வாய் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரெமோ” திரைப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு குண்டை போட்டார், அதாவது சிலர் தன்னுடைய படங்களை முடக்க முயற்சித்து வருகின்றனர். “யார்கிட்ட இருந்தோ இந்த ஹிட்டைத் திருடிட்டு வர்ற மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடி, போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நாங்க யார்கிட்டயும் எதுவுமே கேக்கலை, உதவி எதுவுமே செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா, வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன். என்று கண்ணீர் விட்டு அழுதார்.
இவ்வாறு கூறியதும் நமக்கு ஆச்சரியம் யார் சிவகார்த்திகேயனின் படங்களை முடக்க நினைப்பவர்கள் என்று. யாராக இருக்க முடியும் என்று நாம் குழம்பிக்கொண்டு இருக்கும் போது நடிகர் சிம்பு ஒரு டிவிட் போட்டுள்ளார் அதில் கவலைப் படவேண்டாம் சிவா நாங்கள் இருக்கின்றோம் எனக்கும் இப்படி நடந்தது கடின முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் என்றார்.
str
இவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் முதலமைச்சர் அம்மா பூரண குணமடைய காஞ்சிபுரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் நடிகர் விஷால் பங்கேற்றார், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் விஷால் அளித்த பேட்டி
சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்பேன். இதுபோன்று நடிகர் சங்கத்திலும் மூன்று புகார்கள் வந்துள்ளது. புகார் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. விரைவில் அவருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நானும் பாதிக்கப்பட்டேன் சினிமாவில் நிறைய துறையில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறது. ஒருகாலத்தில், சிவகார்த்திகேயன் போன்று நானும் பிரச்னைகளை சந்தித்தேன். நடிகர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து பெற்ற தொகை, அதன்பின்னர் சங்கத்தில் மேற்கொண்ட நலத்திட்ட உதவிகள் எல்லாவற்றுக்கும் உரிய கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும், ஏன் நீங்களே கூட வந்து கணக்குகளை பார்க்கலாம். இவ்வாறு விஷால் கூறினார்.