விஷால் கைது: அதிரடியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்க அலுவகத்திற்கு சீல்!

தயாரிப்பாளார் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் திரைப்பட தயாரிப்பாளார் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பிரச்சனை தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

producer

நடிகர் விஷால் தமிழக திரைப்பட சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளாராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளார்கள் மீது கண்டிப்பு காட்டப்படுகிறது என தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை விஷால் மீது தயாரிப்பாளார் சுமத்தி வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளார் சங்கத்தின் வைப்பு நிதியில் விஷால் மோசடி செய்துள்ளதாக கூறி, நேற்று திரைப்பட தயார்ப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியிலாக சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்திற்கு பூட்டு போட்டு சாவி போராட்டக்காரர்கள் எடுத்தனர்.

vishal

இது குறித்து அறிந்ததும் தயாரிப்பாளார் சங்க அலுவலகத்திற்கு வந்த விஷால் புட்டை உடைக்க முயன்றார். அப்போது, “ என்னுடைய அலுவலகம், ஏன் பூட்டுப்போடுகிறீர்கள். அதிகாரம் இல்லாதவர்கள் போட்ட பூட்டுக்கு பாதுகாப்பு அளிக்கிறார். இதை எங்களால் நம்ப முடியவில்லை. பூட்டை உடைக்க எனை அனுமதிக்கவில்லை” என கூறினார். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவவே விஷால் கைது செய்யப்பட்டார்.

இந்த பிரச்சனையை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விஷால் மற்றும் அவருக்கு எதிரானவர்களை அழைத்து பேசி தீர்வு காணும் வரை அலுவலகம் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், முறையான ஆர்.டி.ஒ விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.