விஷால் – ஆர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் தொடக்கம்…!

--

நோட்டா’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஆனந்த் ஷங்கர். இதில் விஷால் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவருக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக மிருணாளிணி நடிக்கவுள்ளார்.