“கே.ஜி.எஃப்.” படதமிழ் உரிமையை வாங்கினார்  விஷால்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் கே.ஜி.எஃப் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார்.

பிராஷாந்த் நீள் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள   பிரம்மாண்டமான   படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாகுபலி, 2.0  ஆகிய பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில்   கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை வெளியிட்ட விஷால் பேசும் போது,

இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் ஏதோ ஒரு வகையில் பங்குபெற விரும்பினேன். அதனால் மகிழ்ச்சியுடன் தமிழ் உரிமையை வாங்கினேன்” என்றார்.

 

 

பக்குழுவினர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது:

1951-ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை அடப்படையாக வைத்து உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் நாயகனாக நடித்திருக்கிறார்.

 

இந்த படம் ரூ.80 கோடியில் பெரும் பொருட்  செலவில் தயாராகி உள்ளது. வரும்  டிசம்பர் 21-ஆம் தேதி உலகம் முழுதும் இப்படம் திரையிடப்பட இருக்கிறது” என்று தெரிவித்தனர்.