தனது தந்தை ஜி.கே.ரெட்டியுடன் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்…!

‘அயோக்யா’.படத்தைத் தொடர்ந்து,சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கடந்த சனிக்கிழமை (மே 8) பிறந்த நாள். அப்போது தந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஷால்.

மேலும், “எனது தந்தை. எனது ஊக்கம். உங்களைச் சந்தித்து, நேர்மையாகவும், நல்லது செய்யவும், நான் தொடங்கிய விஷயத்தை முடிக்கவும் தேவையான அனைத்து வலிமையையும் ஊக்கத்தையும் பெற்றேன். நடிகர் சங்கக் கட்டிடம் நேர்மையாகவும் அக்கறையுடனும் கட்டப்பட்டு வருகிறது. நான் தாழ்ந்துபோக மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Ayogya', birthday, GK Reddy, Vishal
-=-