வெளியானது விஷாலின் ‘சக்ரா’ படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்….!

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’.

இந்தக் கொரோனா ஊரடங்கில் அனைவருமே படம் குறித்த தகவல்கள், டீஸர், ட்ரெய்லர் என வெளியிடத் தயங்கிய நேரத்தில், விஷால் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லரை 4 மொழிகளில் வெளியிட்டார்.

இதனிடையே, இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, “‘சக்ரா’ படம் திரையரங்கில்தான் வெளியாகும். இயக்குநரே இன்னும் ஒரு வார படப்பிடிப்பு இருப்பதாக பேட்டியளித்திருந்தார். ஆகையால் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் திரையரங்கில் ‘சக்ரா’ வெளியாகும் என்பது உறுதியாகியது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது.

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது.