வரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி!:  விஷால் ஓப்பன் டாக்

“ஆடு பகை, குட்டி உறவா” என்று ஒரு ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஷாலுக்கு முழுமையாக பொருந்தும்.

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை கடுமையாக எதிர்த்து நின்று, வென்றவர் விஷால். இரு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

அதே நேரம் சரத்குமார் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கும் விஷாலுக்குமான காதல் பற்றிய செய்திகள் நின்றபாடில்லை.

‘இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்கிற அளவுக்கு செய்திகள் பரவின.

vishal-varalakshmi-sarathkumar-in-nataraju-thane-raju-nataraju-thane-raju_0_0_0

ஆனால் விஷால், “.  என் வாழ்க்கையில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பட் அவர் என் நெருங்கிய தோழிதான்” என்று மணிரத்தினம் பட வசனம் மாதிரி குழப்பான அறிக்கைகளை கொடுத்துவந்தார்.

இந்த நிலயில் முதன் முதலாக “வரலட்சுமிதான் எங்க வீட்டு மகாலட்சுமி” என்று முதன் முதலாக தெரிவித்திருக்கிறார் விஷால்.

இன்று அவர் அளித்த பேட்டியில், “”வரலெட்சுமி என்னுடைய பள்ளித்தோழி.  நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். அவர்தான் எங்கள் வீட்டு மகாலட்சுமி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் இப்போதே சொல்லி விட்டேன்,” என்று அறிவித்திருக்கிறார் விஷால்.

இதற்கு சரத் தரப்பில் இருந்து எந்த மாதிரியான எதிர்வினை வரும் என்று தெரியவில்லை.

அனைவரின் சம்மதமும் கிடைத்து, சிறப்பாக திருமணம் நடக்கட்டும். வாழ்த்துகள்.