சென்னை:

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்க நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ ஆர்.கே.நகரில் அடித்தட்டு மக்களின் வீடுகளில், தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகளும், மீனவர் பிரச்சனைகளும் தீர்க்கபடாமல் உள்ளன. ஆர்.கே.நகரில் மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.