என்ன தைரியத்தில் விஷால் களம் இறங்குகிறார்? எஸ்.வி.சேகர் காட்டம்

சென்னை,

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியின்ர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்காக நடிகர் விஷால் இதுவரை என்ன செய்திருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ள எஸ்.வி.சேகர், என்ன தைரியத்தில் களம் இறங்குகிறார் என்றும்,   எங்கெங்கேயோ இருப்பவர்கள் எல்லாம் ஆர்.கே.நகரில் ஓட்டு போட முடியாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் விஷால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறி உள்ளார்.

அவரது அறிவிப்புக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் வேளையில், திரையுலகை சேர்ந்த எஸ்.வி.சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் முடிவு புத்திசாலித்தனமானது அல்ல எனவும்,  ஆர்.கே.நகர் தொகுதிக்காக நடிகர் விஷால் இதுவரை என்ன செய்திருக்கிறார் எனவும்  கேள்வி எழுப்பி உள்ளார்.

எங்கெங்கேயோ இருப்பவர்கள் எல்லாம் ஆர்.கே.நகரில் ஓட்டு போட முடியாது எனவும் குறிப்பிட்டார்.  ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் மக்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள் எனவும் என்ன தைரியத்தில் இவர் களம் இறங்குகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.