ஆர்கே நகரில் விஷாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை:

நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரையுலக வாழ்க்கையும் அஸ்தமிக்கும். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்பு குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ‘‘ விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல கிடையாது.

நடிகர் விஷாலுக்கு நிச்சயம் ஆர்கே நகரில் டெபாசிட் கூட கிடைக்காது. அவரது அரசியல் கனவோடு திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கப் போகிறது’’ என்றார்.