தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷால் தனது அணியினருடன் களமிறங்க முடிவு….!

தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே அணியினருடன் விஷாலும் களம் காணவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மேலும் தாணு, கேயார் ஆகியோர் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என 4 அணிகள் போட்டியிடும் எனத் தெரிகிறது.