புதுக் கட்சி பற்றி விரைவில் ஆலோசனை : விஷால்

துரை

ள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு புதுக் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.

நடிகர் விஷால் கடந்த வருடம் நடந்த ஆர் கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்தார்.   ஆனால் அவர் மனு நிராகரிக்கப்பட்டது.   விரைவில் அவர் புதுக் கட்சி ஒன்று தொடங்கி அரசியலில் இறங்குவார் என பலரும்கருத்து தெரிவித்து வருகின்றனர்.    ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்ள மதுரைக்கு விஷால் வந்திருந்தார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  புது கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு அவர் உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு விரைவில் புதுக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.   மேலும் பேருந்து கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பதிலளித்தார்.

கார்ட்டூன் கேலரி