2018-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியான படம் ‘அடங்க மறு’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் தங்கவேல்.

தற்போது ‘அடங்க மறு’ இயக்குநரின் படம் என்று விஷாலிடம் சொல்ல, அவரோ கதையே கேட்காமல் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் விஷால் – கார்த்திக் தங்கவேல் – ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூட்டணி உறுதியானது.