நான் பாஜகவில் இணைகிறேனா? விஷால் மறுப்பு….!

நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் ,பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த நிலையில் நான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் பாஜகவின் ஆதரவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கங்கனா ரனாவத்தை நடிகர் விஷால், பகத்சிங்கிற்கு இணையாக ஒப்பிட்டத்தை அடுத்தே இச்செய்தி வரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .