சென்னை

டந்த 45 நாட்களுக்கு மேலாக நடந்த திரைத்துறையினர் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் முதல் தமிழ்த் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர்.   இதனால் புதிய திரைப்படங்கள் வெளியாக வில்லை.   திரைப்படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.  இதையொட்டி அரசு இன்று அனைத்துத் தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.

இதைஒட்டி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர், “அரசின் தலையீட்டால் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.  அதை ஒட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் திரைப்படங்கள் வெளியாகும்.  முதலில் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி திரைப்படம் வெளியாக உள்ளது.  அன்றே படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மீண்டும் தொடங்க உள்ளது.

ஜூன் முதல் திரையரங்க டிக்கட்டுகள் அனைத்தும் கணினி மயம் ஆக்கப்பட உள்ளன.   இனி  திரைப்பட டிக்கட்டுகள் ரூ. 150 க்கு மேல் இருக்காது.   அத்துடன் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைப்பட டிக்கட்டுகள் விற்க ஆன்லைன் இணைய தளம் தொடங்கப்பட உள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.