கொரோனா வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும் : விஷால்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இதனால் மார்ச் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பதிவில்

”கரோனாவுக்கு எதிரான இந்த போரில் நண்பர்கள் அனைவரும் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொறுப்புள்ள குடிமகன்களாக அனைவரையும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு தெரிவித்து, இந்த வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.