கையில் மது பாட்டிலுடன் விசால்: மது நிறுவனங்களிடம் பணம் பெற்றாரா?

யோக்கியா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலுடன் விசால் காட்சி தரும் படம் வெளியாகி இருப்பதை அடுத்து,, “மது நிறுவனங்களிடம் விளம்பரத்துக்காக விசால் உள்ளிட்டவர்கள் பணம் வாங்குகிறார்களா” என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகெரட் புகைப்பதைப்போன்ற காட்சி வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸும், “சிகரெட் விளம்பரங்களுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு விட்ட நிலையில், திரைப்படங்கள் தான் சிறுவர்களிடம் சிகரெட்டைக் கொண்டு செல்ல கடைசி வாய்ப்பாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டக்ளஸ் பெட்சர் கூறியிருந்தார். சர்கார் படத்தில் தேவையின்றி புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது, விஜய்யும், முருகதாசும் சிகரெட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகைக்கும் காட்சிகளை திணித்துள்ளனரோ என்ற ஐயம் எழுகிறது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது, விஷால் நடித்துவரும் படம் அயோக்யா திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.  ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இயக்கும் முதல் படம் இது.  இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.  தெலுங்கில் வெளியான டெம்பர் தெலுங்குப் படத்தின் ரீமேக்  படமான இதில், காவலராக விசால் நடிக்கிறார்.

நேற்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் காட்சி உள்ளது.

இப்போதும் சர்கார் படத்துக்கு எழுந்தது போலவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரும், “சிகரெட் போலவே மது விற்பனைக்கும் விளம்பரம் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆகவே மது ஆலை அதிபர்களும் தங்கள் விளம்பரத்துக்காக திரைப்படத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள் பணம் கொடுத்துத்தான் மது பாட்டிலுடன் விசால் போஸ் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த லட்சணத்தில் இவர், நாட்டைத் திருத்தப்போவதாகவும் தேர்தலில் நின்று பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகவும் பேசுகிறார்” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந் அயோக்கியா திரைப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விசாலுக்குச் சொந்தமான விசால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி