கொரோனாவிலிருந்து மீண்ட விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி கடும்பயிற்சி..

டிகர் விஷால், அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள் ளானார்கள். ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர்.
வைரஸ் பாதிப்புக்குள்ளானபோது விஷால் வெளியிட்ட மெசேஜில்,’ ஆயுர்வேத சிகிச்சையின் உதவியுடன் இருவரும் குணமடைந்தோம். என் அப்பா கொரோனா நேர்மறை என சோதிக்கப்பட்டார், அவருக்கு உயர் வெப்பநிலை, குளிர், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன, எனது மேலாள ருக்கும் அதேதான். நாங்கள் அனை வரும் ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக் கொண்டோம், ஒரு வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியேறினோம். நாங்கள் இப்போது ஹேல் & ஹெல்தி .. இப்போது, ​என தெரிவித்திருந்தார்.


விஷால் தந்தை ஜி.கே ரெட்டி தற்போது 80 வயது தாண்டிவிட்டார். கொரோனா விலிருந்து மீண்ட அவர் வழக்கமான தனது உடற்பயிற்சி செய்து வருகிறார்.
எப்போதும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஜி.கே ரெட்டி, ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்கிறார். அதனால்தான் அவர் 82 வயதில் கூட உடற்தகுதி யுடனும். சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்று விஷால் தரப்பு பெருமை பேசு கிறது.