விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ இரும்புத்திரை’  படம் கடந்த வாரம்  உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்ட  இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில், விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் ராணுவ ஊழல், ஆதார் குறித்து பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இருப்புத்திரை படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாபக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரும்புத்திரை படம், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. அதற்கு  அபிமன்யுடு  என்று பெயரிடப்பட்டது. தெலுங்கு சினிமா உலகிலும் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோருக்கு மார்க்கெட் இருப்பதால் இரும்புத்திரை தெலுங்கு பதிப்பை இந்த மாதம் இறுதியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.