ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படத்திற்கு விஷ்ணு விஷால் கமெண்ட்….!

நடிகை ரித்திகா சிங் எப்போதும் ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் செலுத்தி உடற்பயிற்சி செய்பவர்.

கொரோனா லாக் டவுனில் வீட்டிலேயே அதிகம் உடற்பயிற்சி செய்து வரும் ரித்திகா சிங் நேற்று தான் கேக் சாப்பிடும் போட்டோ என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“என் மூளை க்ரஞ்சஸ் செய்யவேண்டும் என சொல்கிறது. ஆனால் என் வயிறு அதை கேக் என ஆட்டோ கரெக்ட் செய்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். சாக்லேட் மீது அதிக விருப்பம் இருப்பதையும் இந்த பதிவில் ரித்திகா சிங் கூறியுள்ளார்.

இந்த பதிவிற்கு விஷ்ணு விஷால் “இப்போது எங்களையும் இந்த வாரக்கடைசியில் தூண்டி விடாதே. நாங்களும் கடைசியில் கேக் சாப்பிடும்படி ஆகிவிடும்” என கமெண்ட் செய்துள்ளார் .