விஜய் சேதுபதி திரைக்கதை வசனத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த்:…!

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் சஞ்சீவ். இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று (ஜூன் 20) வெளியாகியுள்ளது. இது விஷ்ணு விஷாலின் 18-வது படமாகும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். .

இந்தப் படத்தை சுஜாதா என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். ‘வீழ்வது தவறில்லை, வீழ்ந்தே இருப்பதுதான்’ என இந்தப் படத்துக்கு டேக்லைன் தரப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இதன் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது.