ஜூவாலா காட்டாவுடனான காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால்…!

View this post on Instagram

Happy 2020 ❤️

A post shared by Jwala Gutta (@jwalagutta1) on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்கள்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும், விஷ்ணு விஷாலும் ரகசியமாக சந்திப்பதாகவும், நெருங்கி பழகுவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

அதற்கு விஷ்ணு விஷால் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார் . இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, ரஜினி உங்கள் மீது சந்தேகப்பட்டது தப்பே இல்ல போல் இருக்கு. அவர் சந்தேகம் சரி தான் என கோபமாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி இருவருமே தாங்கள் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளனர். தனக்கு விஷ்ணு விஷால் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, “எனது பேபி.. புத்தாண்டு வாழ்த்துகள் 2020” எனச் செல்லமாகக் குறிப்பிட்டார் . இதனை விஷ்ணு விஷால் ரீ-ட்வீட் செய்தார்.