தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டிலிருந்து விலகிய வீரர் ஒருவர் தன மகனுக்காக ஃபார்முக்கு திரும்புவதை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்திய படம் ஜெர்ஸி .

நெல்சன் வெங்கடேசன் ‘ஜெர்சி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். இப்படத்தில் நானி கேரக்டரில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார்.

கோகுல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ராணா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.