முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் மோகன் தாஸ்…!

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘மோகன் தாஸ்’ . படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

மேலும், இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள அறிமுக டீஸர் மூலம், முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள படம் என்பது தெளிவாகிறது.