வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

அவரை பிரிந்த பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டு லாக்டவுன் நேரத்தில் மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் திருமண பத்திரிகையை இன்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால். ஏப்ரல் 22ம் தேதி அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது.