கேரள ரசிகர்களுக்கு குறி வைக்கும் நம்ம ஊர் ஹீரோ..

கேரளாவில் தளபதி விஜய் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. இந்நிலையில் மற்றொரு தமிழ் ஹீரோ கேரள ரசிகர்களுக்கு குறி வைத்திருக்கிறார். அவர் வேறுமல்ல வெண்ணிலா கபடி குழு ஹீரோ விஷ்ணு விஷால்தான்.
விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடித்த ராட்சசன் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் சமீபத்தில் கேரளா டிவி சேனல் ஒன்றில் மலையாளத்தில் மொழி மாற்றமாகி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நெட்டில் இதுகுறித்து ஹேஷ் டேக் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. அதைக்கண்டு குஷியானார் விஷ்ணு.


பின்னர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ராட்சசன் படத்துக்கு கேரள ரசிகர் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இனி கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் எனது படங்களை தேர்வு செய்வேன். தற்போது நடித்து வரும் படங்களும் அதுபோன்ற கதை அமைப்பு களுடன் கூடியதுதான் என தெரிவித்திருகிறார் விஷ்ணு. தற்போது இவர் ‘எம்.ஜி.ஆர் கார்டன்’, ‘மோகன் தாஸ்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார்.

You may have missed