பூஜையுடன் துவங்கிய விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர் ‘…!

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் எப்.ஐ.ஆர் . இதற்கு ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என்று அர்த்தம் என படக்குழு குறிப்பிட்டுள்ளது .

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்க , கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது .

கார்ட்டூன் கேலரி