பாகிஸ்தானை புகழ்ந்த நடிகை ரம்யா மீது விசுவஇந்து பரிஷத் முட்டை வீச்சு!

 

பெங்களுர்:

 மங்களுர் அருகே காரில் சென்றபோது நடிகை ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. விசுவஇந்து பரிசத், பஜ்ரங்தள் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

கன்னட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கர்நாடகாவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rmya

நடிகை ரம்யா சில நாட்களுக்கு முன்பு கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறிய‌து போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது என தெரிவித்திருந்தார். மேலும் இலங்கையும் தமக்கு பிடிக்கும் என கூறியிருந்தார்.

ரம்யாவின் பேச்சை கண்டித்து, மைசூர், மண்டியா பகுதிகளில் பா.ஜ, விசுவ இந்து பரிஷத், ஏபிவிபி போன்ற இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. ரம்யா மீது தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மங்களுர் சென்ற ரம்யா கார்மீது முட்டைகள் வீசி விசுவஇந்து பரிஷத் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

ஆனால், முட்டை வீசியது பற்றி போலீசார்தான் என்னிடம் தெரிவித்தனர்.  தனது கான்வாயில் வந்த கார் மீது வீசப்பட்டிருக்கிறது; எனது கார் மீது வீசவில்லை என்றும் முட்டை வீசியது எனக்கு எதுவும்தெரியாது என்று கூறினார்.