”விஷ்வ ஹிந்து பரிஷத்” தீவிரவாதத்தை தூண்டுகிறது – சிஐஏ

புதுடெல்லி:
விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஆகியவைகள் தீவிரவாத அமைப்புகளை போன்று செயல்படுவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. சிஐஏ ஆண்டுதோறும் வெளியிடும் உலக நடப்பு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசியவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன் கீழ் பிரிவினவாத குழுக்களின் ஹரியாத் மாநாடு நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
vishwa hindhu parishad
மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் அமைப்புகள் தீவிரவாதத்தை போன்று செயல்படுவதாகவும், அவர்கள் ஆயுதங்களை உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை உலக நடப்பு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளது. சிஏஐயின் உலக நடப்பு புத்தகத்தில் இருந்து இத்தகைய வாக்கியங்களை அழிக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள அதன் நகலை பஜ்ரங் தல் அமைப்பு கேட்டுள்ளது.

இந்த செய்தி சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு கிடைத்தது. நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுவரும் நாங்கள் இதனை எதிர்க்கொள்ள சட்ட வல்லுநர்களையும் நாடியுள்ளோம் என பஜ்ரங் தல் அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனோஜ் வர்மா தெரிவித்துள்ளார். இரண்டு அமைப்புகளை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு சிஐஏ புத்தகத்தில் குறிப்பிட்டதை தொடர்ந்து அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று பாஜகவின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங் அமைப்பும் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறை நிறுவனத்திற்கு எங்கள் அமைப்பு போர் குணம் கொண்ட ஒன்றாக செயல்படுகிறது என்று குறிப்பிட யார் அதிகாரம் அளித்தது என பஜ்ரங் தல் அமைப்பின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் கிளைகளை வைத்திருக்கும் எங்களால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லை. நாங்கள் தேசியவாதிகள், எங்கள் உரிமையை பெற என்ன செய்ய வேண்டுமென்று என்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.